Sunday, 31 January 2016

White God / 2014 / Hungary


     ஒரு தனி நபரையோ ஒரு இனத்தையோ கட்டுப்படுத்தி அடக்குமுறையும் வன்முறையும் அவர்கள் மேல் கட்டவிழ்த்தால் என்ன மாதிரியான விளைவுகள் விளையும் . பொறுத்துக்கொள்ள முடிந்தவரை முயற்சித்து முடியாதப்பட்சத்தில் அவர்கள் கொடுத்த அதே வன்முறை ஆயுதம் ஏவியவர்கள் மீதே ஏவப்படும் என்பதை பலமுறை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது . அந்த இக்கட்டு நிலைக்கு தள்ளப்படவர்களையும் ஆட்கொள்ள அன்பன்றி வேறோன்றும் உண்டோ என்கிறார் இயக்குனர் .

     இந்தப்படம் வெறும் நாய்க்கும் அதன் எஜமானியான மாணவிக்கும் இடையான பாசக்கதையாக மேலோட்டமாக தெரிந்தாலும் மேலே குறிப்பிட உலக நுண்ணரசியலை உள்ளுர வைத்திருக்கிறது .பிரம்மாண்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆள் அரவமற்ற சாலையில் அதி வேகத்தில் வரும் நாய்களின் முதல்காட்சியில் காட்டுகிறார் இயக்குனர் . அதுபோல் அந்த நாய் Hagen முகத்தில் காட்டும் நுட்பமான முக பாவனைகளில் மிளர செய்கிறது .

2014 -ம் ஆண்டு ஆஸ்கர்க்கு ஹங்கேரி சார்பாக தேர்ந்தேடுக்கப்படிருக்கிறது .அதே ஆண்டு கான்ஸ் விருது விழாவில் Prix un certain regard - விருதை பெற்றுள்ளது

செம : முதல் காட்சியும் இறுதிக்காட்சியும்

Trailer : https://www.youtube.com/watch?v=kIGz2kyo26U 

No comments:

Post a Comment