உள்ளங்கவர் கள்வர்கள்
எவ்வளவு ஆக்ரோஷமான கதாபாத்திரம் அது . திரையில் வரும்பொழுது சுற்றி இருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் உணர்ந்த அந்த கடுமையான அதிர்வை நம்மாளும் உணரமுடிகிறது திரைக்கு வெளியிலும் .Frank- ஏன் அப்படி ஆனான் ? அதற்கு நிச்சயம் ஒரு முன் கதை இருக்கும் என்றும் அது எப்படி இருக்கும் என்றும் நம் மனம் கற்பனையில் சஞ்சரித்தாலும் . கடைசி வரை அந்த முன்கதைக்கான தேவை என்ன ? சொல்லவேண்டிய அவசியமென்ன என்று அதுநாள் வரை உருவாக்கப்பட்டிருந்த திரைக்கதை பாணியை மீறுகிறார் இயக்குனர் Lynch .
Frank-கதாபாத்திரத்திற்கு இணையாக அவ்வளவு அமைதியும் தீர்க்கமும் நிறைந்த நாயகன் கதாபாத்திர ஆக்கமும் சிறப்பாக இருந்தது.கருத்துக்கள் எதையும் படம் சொல்லவில்லை ;) . ஒரு கதைச்சொல்லி கதை சொல்ல சுவாரஸ்யத்தில் இயல்பாய் நாம் எழுப்பும் "ம் " கொட்டளைப்போல . ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை இரண்டுமணி நேரம் தன்னோடு நம்மை பிணைத்து வைத்துக்கொண்டது . 30- ஆண்டுகள் ஆகியும் சுவாரஸ்யம் குறையாமல் உயிர்ப்போடு இருக்கிறது . wild at heart & Mulholland drive க்கு பிறகு நான் பார்க்கும் David Lynch-ன் மூன்றாவது படைப்பு இது .பார்த்த எல்லா படைப்புகளிலும் அவரின் மேதமைத்தன்மை கசிந்துகொண்டே இருக்கிறது ( Mulholland drive புரியாமல் சுற்றும் கூட்டத்தில் நானும் ஒருவன் ) . அனைத்து படங்களிலும் பார்வையாளனாக அவரிடம் தோற்றுகொண்டே இருக்கிறேன்.
Blue velvet [1986]- David Lynch