Saturday, 31 October 2015

The Lunchbox /2013 / Hindi


 
திருமண உறவு தாண்டிய ஒரு ஈர்ப்பு எதுவாக இருந்தாலும் , அது இந்த சமுகத்தில் கள்ள காதலாக மட்டுமே பார்க்கடுகிறது .தினசரிகளில் படிக்கும் எல்லா கள்ள காதல்கலும் உடல் சார்ந்த ஈர்ப்பாகவே இருந்திருக்கும் என்று முடிவு செய்வது யார் ?

   திருமண உறவு தாண்டிய ஒரு ஈர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டு இது இயல்பானதே .அதை எப்படி கையாள்கிறார்கள் என்பது அவரவர் பக்குவத்தை பொருத்தது . அனால் அப்படி ஒரு ஈர்ப்பே பெருங்குற்றம் என்று சொல்வதை எப்படி எடுத்துகொள்வது . சர்ச்சையான இப்படிஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அழகிய கவிதை ஒன்றை எழுதியுள்ளனர் .பிறன் மனை நோக்கும் ஒரு பேரழகன் பற்றிய கதை .

தயாரிப்பாளர் : Anurag Kashyap நடிகர்கள் : Irfan Khan Nimrat Kaur Nawazuddin Siddiqui இந்த பெயர்களுக்காகவே படத்தை பார்க்கலாம்

செம :

  • நாயகியின் தந்தை இறந்த எழவு வீட்டில் அவள் தாய் புலம்புவது .
  • இறுதியில் பந்து கேட்க வரும் அந்த சிறுவர்களிடம் Irrfan Khan- பேசும் விஷயம் .

Trailer : https://www.youtube.com/watch?v=Enq9nNGnMFY 

Thursday, 29 October 2015

SHAME /2011 / British


   
      உறவுகள் தவிர்த்து கலவி மட்டுமே வாழ்க்கை என்று இருக்கும் ஒரு sex addict இன் இயல்பான கதை. உறவுகள் என்றாலே சுமை என்று காதலியைக்கூட தவிர்ப்பவனின் வாழ்வில் நுழையும் ஒரு உறவு ஏற்படுத்தும் மாற்றம் . நாயகனாக நடித்திருப்பவர் பல இடங்களில் நடிப்பில் அள்ளுகிறார் (Steve Jobs படத்தில் Steve Jobs-ஆக நடிப்பவர் இவர்தான் ). இசையும் ,நடிப்பும் ,உள்ளடக்கமும் படத்தை நல்ல ஒரு நிலைக்கு எடுத்து செல்கிறது .

செம : இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் காட்சி அதன் பின் வரும் ஓட்டமும்

Trailer : https://www.youtube.com/watch?v=zyUqkoJC3pQ