Le Corbusier கலையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதற்கு / பேசுவதற்கு பதில் ஒரு சிறு கவிதையில் மொத்தமாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார் . கலைஞன் யார் ! ஏன் அவன் திரும்ப திரும்ப அந்த கலையை நோக்கி உந்தப்படுகிறான் ! என
அந்த பெரிய வஸ்தாதுவின் கவிதையையை தமிழ்படுத்தியதொரு தருணம் .
சாகசக்காரன் ......
கழைக்கூத்தாடி சதா சாவை ஸ்பரிசித்து திரும்புகிறான் . .
யரோ ஆட்டுவிக்கும் பொம்மையாயல்லாமல் ,
தன்னைத்தானே நெகிழ்த்தி ஆட்டுவித்துக் கொள்கிறான் .
அடிகளையும் அங்ககீனங்களையும் அனுதினம் அனுமானித்தே
அம்பலத்தில் இறங்குகிறான் அவன் .
என்றோ சிறிதாய் பிசகப்போகும் நேர்த்தி தன் காலத்தை
சிதறடித்துவிட்டு போகுமென்பதை அறியாமலில்லை .
அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை ,நன்றி நவிழும் நாவுமில்லை .
தன்னையே முற்றாக ஒப்புவித்து கழைக்கூத்தாடிகளின்
மாய வெளியில் சுழல்வதில் மிஞ்சுவதென்ன ? -ஏனையோர்
எய்தாத அனுபவத்தை எளிதாய் கைக்கொள்ளும் போதை !
----தமிழில் - பாலகுரு K
(மகாகலைஞர்களின் படைப்புகளை பிரதியெடுத்தல் கூட சிரமமாக இருக்கிறது )
An acrobat is no puppet,
He devotes his life to activities
in which, in perpetual danger of death,
he performs extraordinary movement of
infinite difficulty, with disciplined
exactitude and precision.....free
to break his neck and his bones and
be crushed.
Nobody asked him to do this.
Nobody owes him any thanks.
He lives in an extraordinary world, of the acrobat.
Result: most certainly!
He does things which others cannot.

