குறைந்த கதாப்பாத்திரங்கள் நிறைந்த படங்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த பொழுது சிக்கிய படம் இது .கட்டுமான நிறுவனமொன்றில் பணிபுரியும் நாயகன் .அடுத்தநாள் நாட்டிலேயே பெரிய கட்டுமான நிகழ்வு ஒன்றை முன்னின்று நிகழ்த்தவேண்டும் . ஆயத்தப்பணியில் இருப்பவனுக்கு மருத்துவமனையியிலிருந்து அவசர அழைப்பு .பிரசவத்தை எதிர்கொள்ளும் தோழிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டுமென்று . அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான ஒரு அத்யாயம் அது என்பதால் . நாளைய வேலை நாளைக்கு என்று காரில் அந்த நகருக்கு பயணப்படுகிறான் .
போகும் வழியில் அவன் தொழிற்சாலையின் தலைவர் , இவனுக்கு கீழ் பணிபுரியும் ஊழியன் , அந்த நகர நிர்வாக தலைவர் , மனைவி ,குழந்தைகள் , தோழி , மருத்துவர் என்று ஒரு பத்துக்கும் மேற்பட்டோரோடு தொலைப்பேசியில் பேசுகிறான். அந்த 70 நிமிடங்கள் அவன் பேசும் பேச்சின் ஊடே அவன் யார் என்பதும் அவன் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது நமக்கு .
90 நிமிடங்களும் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் நாயகன் மட்டுமே திரையில் தோன்றுகிறார் . பார்வையாளருக்கு சோர்வை ஏற்படுத்த அனேக வாய்ப்புள்ள இப்படி ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அசத்தியிருக்கிறார் இயக்குனர் . Tom Hardy என்ற நடிப்பு ராட்சசன் இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது . அதிகமாக ஸ்பேஸ் பாரை தட்டி தட்டி பார்த்தப்படங்களில் இதுவும் ஒன்று , வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமானவை.
