மனித மனதில் உள்ள வன்மம் வெளிப்பட தகுந்த தருணத்திற்காக காத்திருக்கிறது . அந்த தருணம் பலருக்கு ஒரே நாளில் வாய்த்தால் ? யார் வெளிபடுத்துகிறார்கள் யார் அதை எதிர்கொள்கிறார்கள் என்று வரைமுறையே இல்லை,எய்தவரே பலியாவதும் நடக்கிறது .எந்த பாத்திரமும் குற்றவாளிகள் அல்ல அவர் அவர் பார்வையில் அவர்களுக்கான ஞாயங்கள் இருக்கிறது . இப்படி ஒரு விஷயத்தை கோர்வையாய் திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குனர்கள் நின்று விளையாடுகிறார்கள் . Big Bad Wolves - பார்த்த பின் அந்த இரட்டை இயக்குனர்களின் பட பட்டியலை தேடினால் . அதற்கு முன் அவர்கள் எடுத்த ஒரே படம் என்று இந்த படம் இருந்தது . classic thriller க்கான முயற்சியை முதல் படத்திலேயே முயன்றிருக்கிறார்கள் அதில் கொஞ்சம் பிசகினாலும் - Big Bad Wolvesல் நிறைவேற்றிவிட்டார்கள் .
செம ; அந்த கன்னி வெடியும் கன்னியும்
பெயருக்காகவே பார்க்கலாம் : Lior Ashkenazi
Trailer : https://www.youtube.com/watch?v=UJMv7GzE_do
