நதி , விருச்சம் , பெண் - இவற்றின் மூலத்தை தேடாதே - போய்விடு
பல்வேறு பருவங்களில் எதிர்கொண்ட ஈர்ப்புகள் காதல்கள் பற்றி வெவ்வேறு களங்களில் சினிமா மொழியில் ஆட்டோகிராப் , அட்டகத்தி , பிரேமம் என்று காட்சிபடுத்தியபோது மக்கள் கொடுத்த வரவேற்ப்பு அபரிவிதமானது . ஏனெனில் எல்லோரும் கடந்து வந்திருப்பதற்கான சாத்தியகூறூகள் நிறைந்த களம் அது .
அப்படி ஒரு களத்தில் நாயகர்களுக்கு பதிலாக நாயகியை முன்னிறுத்தி ஒரு படம் கொடுத்தால் இங்கு எதிர்வினை எப்படி இருக்கும்?? அப்படி ஒரு கதையை களம்கண்டிருக்கிறார் இயக்குனர் . தமிழில் "கலகலப்பு" என்று திருடி கிண்டப்பட்ட Soul Kitchen - இயக்குனரின் மற்றொரு படைப்பு .
கட்டுக்கடங்கா ஒரு காட்டாற்றை பற்றிய கதை . ஒரு காட்டறா அல்லது இரண்டா என்று ஒரு குழப்பம் வருகிறது ஏனெனில் நாயகனும் ஒரு வகையில் அவளைப்போலவே.
அந்த நாயகன் பாத்திரம் மேலே உள்ள மேற்கோளின் சாரம்சத்தை உணர்ந்த ஒருவனாக இருக்க வேண்டும் . அவளை அப்படியே ஏற்றுகொள்கிறான் அவனோடு இருந்த போதும் , இல்லாதபோதும் .முதல் மற்றும் மூன்றாம் காதல்கள் காட்டப்பட்ட விதத்தால் இப்படம் ஒருவித classic - தன்மைக்குள் சென்று விடுகிறது.
செம : பார்த்த இரண்டாம் நிமிடத்தில் அவள் செய்யும் அந்த “Marriage proposal”
பெருக்ககவே பார்க்கலாம் : இயக்குனர் Fatih Akin
Trailer : https://www.youtube.com/watch?v=zRioyPHCSVo
