Wednesday, 25 March 2020

The Seventh Seal -Ingmar Bergman - 1957

 



”செவென்த் சீல்” படத்தில் பிளேக் நோய் ஒவ்வொரு ஊராக பரவி அழிக்கும் , அதை எதிர் நோக்கியே பல கிராமங்கள் பயத்தில் அரை பிணமாக அலைந்து கொண்டிருக்கும் .படம் பார்த்த போது அந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சி இல்லாமல் எப்படி செத்திருக்கிறார்கள் என்று `’உச்` கொட்ட தோன்றியது. நாம் வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் அந்த மனிதர்களின் மரணபய மனநிலைக்கு நம்மை இட்டு சென்றுள்ளது கோரோனா .

கதையின் மைய பாத்திரத்திடம் மரணதேவன் செஸ் விளையாடுவான் . மரணதேவன் வென்றால் நாயகன் மரணிக்க வேண்டும் . அந்த விளையாட்டை தன் சாதூரியத்தால் தொடர்ந்து கொண்டே இருப்பான் நாயகன் . இந்த விளையாட்டு ஒருநாள் முடியும் , அது நிச்சயம் அவனது தோல்வியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்தும் தொடர்ந்து கொண்டிருப்பான். அதே நேரம் சாவுக்கு பின் என்ன என்ற கேள்விக்கு விடையை நோக்கி செல்வான் . சாவின் விளிம்பில் நிற்கும் சிலரை சந்தித்து கேள்விகள் கேட்பான் . இறுதியாக தான் தோல்வியடைவதற்கு முன் ஒரு அறமான காரியத்தை செய்துவிட்டு மரணதேவனிடம் தோற்பான் .நம்முள் தத்துவ விசாரணைக்கான பொறியினை கொடுக்கக்கூடிய படைப்பு . படத்தை மீள் பார்வைக்கு உட்படுத்த ஏதுவான காலகட்டம் இது . அதே போல சாவைப்பற்றி பெரும் தத்துவ விசாரம் செய்த சம்பத்தின் இடைவெளியும் இந்த தருணத்தில் வாசிப்புக்கு உட்படுத்தலாம்.