சில படங்களில் நாம் எதிர்பாராமல் சில
விஷயங்கள் கிடைக்கும் . சமீபத்தில் - பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு குரல் சிக்கியது . அந்த நாயகன் எப்போதும்
இசையினூடே வாழ்பவன்.அந்த ஸ்பனீஷ் பெண்
அவனது இசைதட்டு சேகாரங்களை பார்த்துவிட்டு
அதிலிருந்து ஒன்றை எடுத்து இதை
இசைக்கமுடியுமா என்பாள் .... இவள் என்
மனைவிக்கு பிடித்தமான பாடகி என்று சொல்லிவிட்டு
இசைவான் .
ஒரு பெண் குரல் ஸ்பானிஷ்
இசையுடன் தொடங்கியது ஒரு நிமிடத்தில் அனிச்சையாய்
விரல் SPACE -பட்டனை தட்டியது . Rewind - செய்து
அவர்கள் பேசியதை உற்று கவனிக்க
செய்தது . Francisca
Valenzuela- என்ற பெயர் துப்பாய் கிடைத்தது
.அதைவைத்து விக்கியில்
தேட . அவர் ஒரு சிலி
நாட்டு பாடகி என்றும் (Muérdete La Lengua, Buen Soldado, Tajo Abierto) 3 இசைத்தட்டுகள்
இதுவரை வெளிவந்திருக்கிறது என்ற தகவல்கள் கிடைக்க
. அனைத்தையும் இறக்கி கேட்டால் அத்தனையும்
அற்புதம் . கொரியன் ,மலையாளம் மொழிகளைப்போல ஸ்பானிஷ்ம் பெண்கள் பேசும்போது அழகாய்
இருக்கிறது ....பாடினால் !!
சில பருக்கைகள் பதத்திற்காக