நாம் குழுவாக எதிர்வினை புரியும்போது அதீத உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றோமோ . நம் எதிர்வினைகளுக்கு எந்த அளவு வலிமை உண்டு என்பது பல நேரங்களில் நமக்கு தெரிவதில்லை . அனால் நம்மை எப்படி ஆட்டிவைப்பது என்பது ஊடகங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது . எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் -என்பதை எப்போதும் நாம் மறந்துவிடுகிறோம் .
இந்த படம் பேசும் கொலைவழக்கு பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று . படம் பார்த்த பிறகும் இதில் குற்றவாளி யார் என்பது நம்மாளும் உறுதிபடுத்த முடியவில்லை . அனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது இந்த வழக்கு ஏனைய வழக்குகளை போல கையாளப்படவில்லை . ஊடகங்கள் பாய்ச்சிய ஒளியால் மக்கள் கிளர்ந்தெழ அது அரசுக்கு அழுத்தம் கொடுக்க . அமைச்சகம் -புலன்விசாரணை அமைப்பு - நீதிமன்றம் என அந்த அழுத்தம் பரவுவதை கண்ணுறமுடிகிறது . எதோ விதத்தில் இவழக்கை முடித்தால் போதும் என்ற மனநிலைக்கு ஆளாகி ஒரு விதமாக வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது . தண்டனை பெற்றவர்கள் நிரபராதிகளாக இருந்திருந்தால் ? என்ற கேள்வி படம் முடிந்து பலமணிநேரம் நம்மை துளைத்தெடுக்கிறது .
Talvar என்றால் நீதி தேவதை கைக்கொண்டிருக்கும் வாள் என்று சொல்கிறார்கள் . நம்மை உண்மைக்கு மிக அருகில் நிறுத்தி எல்லா சம்பவங்களையும் பார்க்கும் சாட்சியாக்குகிறார் இயக்குனர் . இவளவு நடுநிலையாக ஒரு உண்மை சம்பவத்தை கையாண்ட விதத்தில் நம்மை கவர்கிறார் .
செம : கடைசி 10 நிமிடங்கள் நடக்கும் அதிகாரிகளுக்கிடையேயான இரு தரப்பு விவாதங்கள் .
பெயருக்காகவே பார்க்கலாம் : Irfan Khan , Konkona Sen Sharma
Trailer : https://www.youtube.com/watch?v=aQNMsw8Ljjc

