Sunday, 26 April 2020

Ugetsu - 1953 - Kenji Mizoguchi



சுனங்காமல் பார்வையாளனை  தொடர்ந்து படத்தோடு இருத்தி வைத்துக்கொண்துதான்  ஆச்சரியப்படுத்தியது . 70 வருடத்துக்கு முந்தைய  கருப்புவெள்ளை படம் இன்னும் உயிர்ப்போடு  இருக்கிறது . அவர்கள் நாட்டில்  புழங்கிய எளிய  கதைதான் என்றாலும் எங்கு தொடங்கினார்  நடுவில் என்னென்ன நாகசுகள் காட்டி எப்படி முடித்தார் என்பதில் இயக்குனரின் தனித்தன்மை மினுங்கியது . 

போரை பற்றிய படம் என்றும் கொள்ளலாம் ஏனெனில்  படத்தில் போர் இல்லை,  போரின் சுவடுகளும் அது சாதாரணர்களிடம்  நிகழ்த்திவிட்டு போகும் வீச்சையும் நமக்கு உணர்த்துகிறது    , போரின் அழுத்தம் படம் நெடுக விரவிக்கிடந்தது  . மற்றோரு கோணத்தில் நிதர்சனத்தை உணரா  தனிமனித அபிலாஷைகள் எங்கே இட்டுச்செல்லும் என்றும் காட்டுகிறது படம் ,ஸ்திரமான கதையாடலும்  காட்சிகளின் கோர்வைகளும் வியக்கவைத்தன , தேயையற்ற காட்சி என்று ஒன்றை நம்மால் கைகாட்டிவிட முடியாது ,   .இவற்றை தாண்டி ஒரு ஆச்சர்யத்தை படத்தினுள் புதைத்து வைத்திருந்தார் இயக்குனர்  . அதற்கான எந்தவித முஸ்தீபுகளும் அவர் முன்கூட்டியே நமக்கு காட்டாதது பெரியதொரு திக்கின்பத்தைக் கொடுத்தது . ஜப்பானிய சினிமா வரலாற்றில் மிக முக்கியமானதொரு படமாக இன்றும் நிற்கிறது .