ஒரு வன்புணர்வு காட்சியோ , இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சியோ,இயல்பான கலவி காட்சியோ வைப்பதற்கான அனைத்து முகாந்திரமும் கதையில் இருந்தும் அதை எதையும் தேர்ந்தெடுக்காமல் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த இயக்குனர் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார் .
படத்தின் முடிவில் 5 நடிகர்கள் பட்டியல் காட்டினாலும், உண்மையில் இருவர் மட்டுமே நடித்துள்ளனர் . மற்ற மூவரும் 2 நிமிடங்கள் மட்டுமே .90 நிமிடங்கள் இருவர் மட்டுமே .அந்த இருவரின் நடிப்பு திறமை படத்தை தாங்கி நிற்கிறது குறிப்பாக அந்த இளம்பெண் . Crime Thriller -படம் என்றால் காது கிழிய இரைச்சல் இசை இருக்கவேண்டும்,கேமரா கண்ணா பின்னா வென்று அலையவேண்டும் என்ற இலக்கணம் எல்லாம் வைத்துக்கொள்ளாமல் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு சுவாரஸ்யம் குறையாமல் கத்தி இன்றி இரத்தம் இன்றி மிரட்டி இருக்கிறார் . Crime Thriller -படங்களின் வரிசையில் இதன் கதை சொல்லும் விதத்தால் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது .
செம : அந்த அறுவை சிகிச்சை
பெயருக்காகவே பார்க்கலாம் : Ellen Page
Trailer : https://www.youtube.com/watch?v=hvx0m2SeOSk
