Tuesday, 9 February 2016

The Best Offer [ La migliore offerta ] / Italian / 2013


ஒரு பலமான சங்கிலியின் வலிமை அதன் வலிமையற்ற ஒரு வளையத்தில் உள்ளது ...

    படத்தை பார்த்து முடித்த பின் இந்த வாசகம் தொடர்ந்து நினைவில் வந்து மோதிக்கொண்டே இருந்தது .இந்த வாசகத்திற்கு 2 மணிநேர பொழிப்புரை எழுதிருக்கிறார் இயக்குனர் . காலம் கடந்து காதல் வரக்கூடாதா என்ன ! ஒரு கண்ணியமான முதியவருக்கு வரும் காதல் ,அவர் அதுவரை காதலித்த விஷயங்களை எப்படி பாதிக்கிறது என்ற சாரம்சத்தோடு சதிராடுகிறார் இயக்குனர் .

    பத்துக்கும் மேற்பட படங்கள் இதுபோல் முதிய காதலை பார்த்தாகிவிட்டது! என்ன புதிதாக !என்று சுணங்குபவர்கள் இந்த படத்தின் இயக்குனர் Giuseppe Tornatore பெயருக்காக படத்தை பார்க்கலாம்.இவர்தான் Cinema Paradiso , Malèna படங்களின் இயக்குனர் . மற்றும் இசை மேதை Ennio Morricon - ன் பின்னனி இசைக்காகவும்

செம : முதியவரின் நடிப்பு குறிப்பாக காதலில் தடுமாறும் காட்சிகள்

பெயருக்காகவே பார்க்கலாம் : Giuseppe Tornatore , Ennio Morricone ,Geoffrey Rush

Trailer : https://www.youtube.com/watch?v=zJGleGyahC8