வரலாற்று புனைவுகளில் புனைவுக்கும் நிதர்சனத்திற்கும் இடையேயான விகிதாச்சாரமும் அதை எப்படி பிணைப்பது என்ற கலையும் கைவரப்பெற்ற கலைஞர்களின் படைப்புகளில் நாம் கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலையை அடைவோம். அப்படைப்புகள் உண்மை என்ன என்று ஆராய்ச்சியில் நம்மை இறக்கிவிட்டுவிடும் . உதாரணத்திற்கு கல்கியின் பல படைப்புகளில் எந்த பாத்திரம் உண்மை எந்த பாத்திரம் புனைவு என்று விளங்க வரலாற்றை படிப்பதை தவிர வேறு வழி இருக்காது . அது போன்று உருவாக்கப்பட்டவரலாற்று புனைவு படம்.
Jack the ripper- இந்த பெயர் மதனின் "மனிதனுக்குள் மிருகம் " மூலம் அறிமுகம் .அவனை பற்றிய விவரிப்புகள் அவன் ஒரு மாய மனிதன் என்ற தோற்றத்தை உருவாக்கியது . பின் Memories of Murder- பார்க்கும்போது jack the ripper-ன் ஞாபகங்கள் வந்து போனது . தொடர்கொலைகாரர்கள் வரிசையில் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் அவன் செய்த கொலைகள் குறைவே . இருந்தும் அந்த கொலைகள் நடந்த காலகட்டமும்(1888) , கொலை செய்யப்பட்ட முறையும் (ஒரு அறுவை சிகிச்சை நிபுணத்துவத்துடன் , படுகொலை என்பதற்கு சரியான விளக்கம் வேண்டுவோர் jack the ripper ன் கொலை விவரங்களை படித்தால் புரியும் ) முக்கியமாக யார் அதை செய்தார்கள் என்பது இன்று வரை தெரியாததும் அவன் பெயரை வரலாற்றில் முக்கியமான இடத்தில் வைத்திருக்கிறது . இந்த பெயர்கூட காவல்துறை புனைந்ததுதான் . இந்த கொலைகாரனின் கதையை சில பல திருப்பங்களுடன் செதுக்கி நம்மை கட்டி போடுகிறார் இயக்குனர் . படம் பார்த்த பின் உண்மை எது என்று விளங்க Prince Albert Victor, Duke of Clarence and Avondaler ன் வரலாற்றில் தொடங்கி Cleveland Street scandal வரை படிக்க வேண்டிய கட்டயத்திற்கு தள்ளிவிடுகிறார் இயக்குனர் . jack the ripper -ன் மேல் இருந்த ஆர்வத்தை காட்டிலும் படத்தில் Johnny Depp - இருக்கிறார் என்பது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது .
பெயருக்காகவே பார்க்கலாம் : Johnny Depp
செம : நாணய சிதறல்களுகிடையே நா நனையும் காட்சி
Trailer : https://www.youtube.com/watch?v=pL2NizCjGxo
