சுனங்காமல் பார்வையாளனை தொடர்ந்து படத்தோடு இருத்தி வைத்துக்கொண்துதான் ஆச்சரியப்படுத்தியது . 70 வருடத்துக்கு முந்தைய கருப்புவெள்ளை படம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது . அவர்கள் நாட்டில் புழங்கிய எளிய கதைதான் என்றாலும் எங்கு தொடங்கினார் நடுவில் என்னென்ன நாகசுகள் காட்டி எப்படி முடித்தார் என்பதில் இயக்குனரின் தனித்தன்மை மினுங்கியது .
போரை பற்றிய படம் என்றும் கொள்ளலாம் ஏனெனில் படத்தில் போர் இல்லை, போரின் சுவடுகளும் அது சாதாரணர்களிடம் நிகழ்த்திவிட்டு போகும் வீச்சையும் நமக்கு உணர்த்துகிறது , போரின் அழுத்தம் படம் நெடுக விரவிக்கிடந்தது . மற்றோரு கோணத்தில் நிதர்சனத்தை உணரா தனிமனித அபிலாஷைகள் எங்கே இட்டுச்செல்லும் என்றும் காட்டுகிறது படம் ,ஸ்திரமான கதையாடலும் காட்சிகளின் கோர்வைகளும் வியக்கவைத்தன , தேயையற்ற காட்சி என்று ஒன்றை நம்மால் கைகாட்டிவிட முடியாது , .இவற்றை தாண்டி ஒரு ஆச்சர்யத்தை படத்தினுள் புதைத்து வைத்திருந்தார் இயக்குனர் . அதற்கான எந்தவித முஸ்தீபுகளும் அவர் முன்கூட்டியே நமக்கு காட்டாதது பெரியதொரு திக்கின்பத்தைக் கொடுத்தது . ஜப்பானிய சினிமா வரலாற்றில் மிக முக்கியமானதொரு படமாக இன்றும் நிற்கிறது .

No comments:
Post a Comment