Wednesday, 27 January 2016

Francisca Valenzuela

சில படங்களில் நாம் எதிர்பாராமல் சில விஷயங்கள் கிடைக்கும் . சமீபத்தில் - பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு குரல் சிக்கியது . அந்த நாயகன் எப்போதும் இசையினூடே  வாழ்பவன்.அந்த ஸ்பனீஷ் பெண் அவனது இசைதட்டு சேகாரங்களை பார்த்துவிட்டு அதிலிருந்து ஒன்றை எடுத்து இதை இசைக்கமுடியுமா என்பாள் .... இவள்  என் மனைவிக்கு பிடித்தமான பாடகி என்று சொல்லிவிட்டு இசைவான் .

ஒரு பெண் குரல் ஸ்பானிஷ் இசையுடன் தொடங்கியது ஒரு நிமிடத்தில் அனிச்சையாய் விரல் SPACE -பட்டனை தட்டியது . Rewind - செய்து அவர்கள் பேசியதை உற்று கவனிக்க செய்தது . Francisca Valenzuela- என்ற பெயர் துப்பாய் கிடைத்தது .அதைவைத்து  விக்கியில் தேட . அவர் ஒரு சிலி நாட்டு பாடகி என்றும் (Muérdete La Lengua, Buen Soldado, Tajo Abierto) 3 இசைத்தட்டுகள் இதுவரை வெளிவந்திருக்கிறது என்ற தகவல்கள் கிடைக்க . அனைத்தையும் இறக்கி கேட்டால் அத்தனையும் அற்புதம் . கொரியன் ,மலையாளம் மொழிகளைப்போல ஸ்பானிஷ்ம் பெண்கள் பேசும்போது அழகாய் இருக்கிறது ....பாடினால் !!

சில பருக்கைகள் பதத்திற்காக

No comments:

Post a Comment