Thursday, 21 January 2016

Amores perros / 2000 / Spanish



 வாசிக்காத புத்தகங்களால் நஷ்டம் வாசகனுக்கே. வாசகச்சாலைக்கல்ல.


    பல பரிந்துரைகள் இருந்தும், சில படங்கள் நல்ல படங்கள் என்று தெரிந்திருந்தும் அதை தவிர்த்துவந்திருப்பொம். Hard drive-ல் அப்படி சில படங்கள் துங்கிக்கொண்டிருக்கின்றன .எந்த ஒரு படத்தையும் பார்க்க ஒரு ஈர்ப்பு ,ஒருவித விசை தேவைப்படுகிறது .அது அந்த நடிகர், நடிகை பிடித்தவராக இருக்கலாம் அல்லது அந்த இயக்குனர் நம் ஆதர்ஷமாக இருக்கலாம் , நமக்கு பிடித்த வகை படமாக இருக்கலாம் . ஏதெனும் ஒன்று நிச்சயம் தேவை.

    அப்படி பலமுறை கேள்விப்பட்ட படம் Amores perros . இது Mexico-ன் சிறந்த 10 படங்களில் ஒன்று . நாய்கள் வைத்து எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமான படம். என்று பல பரிந்துரைகளை பார்த்தும் பெரிதாக ஈர்ப்பு இல்லை(எல்லாவற்றிலும் அந்த செம்பட்டை தலையன் நாயை பிடித்துகொண்டிருக்கும் போட்டோவை போட்டிருந்தது காரணமாக இருக்கலாம்) . சமீபத்தில் தம்பி ஒருவன் இந்தப்படம்தான் ஆடுகளத்துக்கு சிறு பொறி கொடுத்ததாக வெற்றிமாறன் சொல்லியிருப்பதாக சொன்னான். அதே காலகட்டத்தில் The Revenant Movie- படத்தின் Trailer- கவர்ந்தது நிச்சயம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது . அதை பற்றிய தகவல்களை தேடும்போது அந்த இயக்குனரின் முதல் படம்தான் Amores perros - என்று விக்கி கக்கிய பெயர் : Alejandro González Iñárritu மேலும் படிக்க 2014 ல் விருதுகளுக்கு மல்லுக்கு நின்ற Birdman- ன் இயக்குனரும் இவரே என்பது தெரிந்ததும். இவர் வேற ஆளுன்னு புரிந்தது .அடுத்தடுத்த நாளில் இந்த இயக்குனரை பற்றி எஸ் .ரா அவர் பக்கத்தில் எழுதினார் . எதிர்பார்த்த அந்த விசை எதிர்பாராத சமையத்தில் காற்றழுத்த தாழ்வைப்போல் என்னை சூழ்ந்துள்ளதை உணர்ந்தேன் . அன்று இரவே படம் பார்த்தேன் .

    Survival -தான் இந்த இயக்குனரின் அனேக படங்களின் சாராம்சம் என்று படித்தேன் . இந்த படமும் அப்படி ஒரு பாணியில் எடுக்கப்பட்டதாக பட்டாலும் . ஒரு வகையில் நாய்களின் படம் ,முழுதும் நாய்கள் இருக்கிறது .இன்னொரு கோணத்தில் மணவாழ்வில் சிக்கல்களை உருவாகிக்கொள்ளும் மனிதர்களின் கதை . இன்னொரு கோணத்தில் நிற்கதியற்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெண்களின் கதை . மொத்தமாக பிரச்சனைகள் யாருக்குத்தான் இல்லை நாய்முதல் அந்த மேட்டுக்குடி மாடல் வரை எல்லோரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்வே பிரச்சனையாய் இருக்கிறது அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் அதை எப்படி கடந்து செல்கிறார்கள் என்பதை படத்தின் மையமாய் நிலை நிறுத்துகிறார் இயக்குனர் .

செம : ஆரம்பத்தில் வரும் அந்த நாய் சண்டை & அந்த வயதானவர் வரும் அனைத்து காட்சிகளும்.

பேருக்காகவே பார்க்கலாம் : Alejandro González Iñárritu


Trailer : https://www.youtube.com/watch?v=xvwk-xYZcr0

No comments:

Post a Comment