திருமண உறவு தாண்டிய ஒரு ஈர்ப்பு எதுவாக இருந்தாலும் , அது இந்த சமுகத்தில் கள்ள காதலாக மட்டுமே பார்க்கடுகிறது .தினசரிகளில் படிக்கும் எல்லா கள்ள காதல்கலும் உடல் சார்ந்த ஈர்ப்பாகவே இருந்திருக்கும் என்று முடிவு செய்வது யார் ?
திருமண உறவு தாண்டிய ஒரு ஈர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டு இது இயல்பானதே .அதை எப்படி கையாள்கிறார்கள் என்பது அவரவர் பக்குவத்தை பொருத்தது . அனால் அப்படி ஒரு ஈர்ப்பே பெருங்குற்றம் என்று சொல்வதை எப்படி எடுத்துகொள்வது . சர்ச்சையான இப்படிஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அழகிய கவிதை ஒன்றை எழுதியுள்ளனர் .பிறன் மனை நோக்கும் ஒரு பேரழகன் பற்றிய கதை .
தயாரிப்பாளர் : Anurag Kashyap நடிகர்கள் : Irfan Khan Nimrat Kaur Nawazuddin Siddiqui இந்த பெயர்களுக்காகவே படத்தை பார்க்கலாம்
செம :
- நாயகியின் தந்தை இறந்த எழவு வீட்டில் அவள் தாய் புலம்புவது .
- இறுதியில் பந்து கேட்க வரும் அந்த சிறுவர்களிடம் Irrfan Khan- பேசும் விஷயம் .
Trailer : https://www.youtube.com/watch?v=Enq9nNGnMFY

No comments:
Post a Comment