Sunday, 31 January 2016

சக்தியின் சிதறல்கள்:




   சில சிற்றருவிகளிள்  நீர்த்திரையைத்தாண்டி உள்ளே செல்ல வழி இருக்கும் , அருவியின் ஆக்ரோஷத்தை தாண்டி அதன் உள்ளே செல்ல, நிசப்தமும் நீர்ச்சிதறல்கள் மட்டுமேக்கேட்கும். அங்கு கண்முடினால் இவுலகிலிருந்து துண்டிக்கப்பட்டு வேறு எதோ ஒன்றுடன் தொடர்பை அந்த நீர்ச்சிதறல்கள் கொடுக்கும். அதுபோன்ற  இசை சிதறல்களை சிதறவிடுகிறார்கள் இவர்கள்.




கிதாருக்கு ஜான் மேக்லகின் ,வயலினுக்கு L.ஷங்கர் , கடத்துக்கு விக்குவிநாயகம் , தபேலாவுக்கு ஜாகிர் ஹுசைன் , மிருதங்கத்துக்கு ராமநாதபுரம்  ராகவன் என்று அன்றயகாலக்கட்டத்தில் ஆர்வமாய் இருந்த ஐவர் ஒன்றிணைத்து "சக்தி குழுவை " உருவாக்கியிருக்கிறார்கள் .

சில வாரங்களுக்கும் முன் John McLaughlin-ன் பிறந்தநாளை முன்னிட்ட பதிவில் அவர் இந்திய இசையை –L.ஷங்கருடன் கற்கும் ஒரு Video - இருந்தது .


இதை கேட்க தொடங்கியவுடன் அந்த சப்தத்திற்கும் அதில் குறிப்பிட்டிருக்கும் 1978 என்ற ஆண்டிற்கும் பொருந்தாதது போன்ற பிறமை   தோன்றியது , அந்த இசை சம கால இசையாய்ப்பட்டது அனால் தரமற்ற அந்த Video quality-ம் இளமையான John McLaughlin-ம் அது 1978 சேர்ந்ததுதான்  என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

Shakti with John McLaughlin- என்ற முதல் த்தை  1976ல் வெளிட்டு இருக்கிறார்கள். அந்த காலக்கட்டத்தில் இப்படி Fusion-கொடுக்கவேண்டும் என்று தோன்றியதும். அதை  நாற்பது  ஆண்டுகள் தாண்டியும் நிற்கும் தரத்தில் கொடுத்ததும் . அதில் இருவர் தமிழர்கள் என்பதும் பெரும் வியப்பை தந்தது ஏனென்றால் இதே 1976 ல் தான் தமிழர்கள் முதன் முதலில் ராஜாவை அன்னக்கிளியில் கேட்க தொடங்கி இருந்தனர் .
Remember shakti-ல் ஷங்கர் மகாதேவனின் ஆலாபனையும்  ஜாகிர் ஹுசைனின் தபேலாவும் மேன்டலின் ஸ்ரீனிவாசின் இசை சிதறல்களும் நிறைந்த "கிரிராஜ சுதா" வை சில ஆண்டுகளுக்கு முன் கேட்டப்போது  John McLaughlin-- என்ற பெயரை பெரிதாக பொருட்படுத்தாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்கிறேன்.


No comments:

Post a Comment