Thursday, 20 February 2020



அகங்காரத்திற்கு எளியவன் வலியவன் என்ற வேறுபாடு இருப்பதில்லை அது விசித்திரமானது , அதற்கு எதிராக நிறுத்தப்படும் அழுத்தத்தை மீறி திமிறி சமருக்கு நிற்கக்கூடியது. அப்படி மாறுபட்ட சமூக பின்புலங்களுடைய இரு கதாபாத்திரங்களின் அகங்காரங்களை வைத்துக்கொண்டு எவ்வளவு கனமான கதையை எழுதியிருக்கிறார் .அந்த அகங்காரங்களுக்கிடையேயான அழுத்தம் குறையாமல் படம் நேடுக புதிதாக தொடர்ந்து கண்ணிகளை உருவாக்கி மூன்று மணிநேரம் சுவாரஸ்யப்படுத்துகிறார் கதாசிரியர் சாச்சு .பிரித்வி கதாபாத்திரத்திற்கு வேறு எவரையேனும் யோசித்துபார்க்க முடிந்த நம்மால் பிஜூமேனன் கதாபாத்திரத்திற்கு வேறு எவரையும் யோசிக்கமுடியவில்லை மனுஷன் படம் முழுதும் வியாபித்து நிற்கிறார் . டிரைவர் குமரா, ஐயப்பன் நாயரின் மனைவி கண்ணம்மா & கோசியின் அப்பா குரியன் கதாபாத்திரங்களின் வார்ப்பு நம்மை வசியப்படுத்துகின்றன .

No comments:

Post a Comment