The Handmaid's Tale - 1990 - Volker Schlöndorff
இப்படியெல்லாம் நடக்குமா ? என்று நாம் யோசிப்பதற்கு முன்பாகவே .அடுத்தடுத்து வேகமாக நகரும் ஆரம்பக் காட்சிகளைக்கொண்டு இதுதான் களம் இந்த எல்லைக்குள்தான் கதை என்று முதல் 15 நிமிடத்தில் நம்மை தயார் படுத்திவிடுகின்றனர் . அந்தக்களத்துக்குள் எவ்வளவு சிக்கலாக முடிச்சுகளைப்போடலாமோ அவ்வளவு சிக்கலாக போட்டு இறுதியில் எளிதாக முடிச்சுகளை அவிழ்க்கிறார் இயக்குனர்.இது நடப்பது ஒரு கற்பனையான கதைக்களத்தில் என்ற எண்ணம் கதை நகர நகர மாறுகிறது . கதையில் வரும் பெண்களும் அவர்களை அந்த மனிதர்கள் நடத்தும் விதமும் விசித்திரமாக தோன்றினாலும் .அதில் நிகழும் பல சம்பவங்கள் சமகாலத்தில் நாம் நிகழ்த்திகொண்டிருப்பதுதானே ! அதை காத்திரமாக காட்சிகளில் காட்டி நம்மை கதிகலங்க வைக்கிறார் இயக்குனர்.
பெண்களுக்கான உரிமைகள் சார்ந்த நமது நிலைப்பாடுகளின் மேல் சில கேள்விகளை எழுப்பி செல்கிறது இந்த படம் .
சமீபமாக The Handmaid's Tale - என்ற புது சீரியல் பற்றிய பரிந்துரைகள் பல சினிமா சம்பத்தப்பட்ட தளங்களில் வந்தன . அதை பற்றிய தகவல்களை தேடியபொழுது அது 1985-ல் எழுதப்பட்ட ஒரு நாவலை தழுவி எடுக்கிப்படுகிறது என்றும் . 1990 ல் அதே பெயரில் ஒரு படம் வந்திருக்கிறது என்ற தகவல் கிடைக்க . இந்த படத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டது . படம் பார்த்த பிறகு அந்த சீரியலை பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது .

No comments:
Post a Comment