The Handmaiden [2016 ]- South korean - Park Chan-wook
மேதமை படைப்பாளிகளின் சில படைப்புகளை பார்த்து இதுதான் அவர்களின் மைல்கல் என்று நாம் வியந்து நிற்கும் தருணத்தில் . அவர்களின் மைல்கல்லை எளிதாக முன்னோக்கி நகர்த்துகிறார்கள் அடுத்த படைப்பில் அதைத் தாண்டி செல்கிறார்கள் . Park Chan-wook ன் The Handmaiden யை சமீபத்தில் - பார்த்த பொது தோன்றியது . Park Chan-wook யை Oldboy - யின் இயக்குனர் என்று குறிப்பிடுவதைக்காட்டிலும் Thirst-ன் இயக்குனர் என்று விளிக்கவே விரும்புகிறேன் . அவர் படைப்புகளிலேயே அது மிகவும் வசீகரித்தது ,அப்படி ஒரு அணுகுமுறையை டிராகுலா படத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை .அவரின் அனைத்து படைப்புகளிலும் கடும் வன்முறையும் காமமும் இருந்தாலும் அந்த படைப்புகள் நம்மை அறத்தை நோக்கியே இட்டுச்செல்லும் .
கதை எளிதுதான் தன் தனித்தன்மையான பாணியில் எடுத்த விதத்தில் மிளிர்கிறது .இரண்டு சதியாளர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே பரஸ்பரம் அவர்களின் இலக்குகளாக இருக்கிறார்கள், .அவர்களின் இலக்குகள் அவர்களுக்குள் வெளிப்படுத்தும் உண்மையும் அன்பும் அவர்களை மாற்றுகிறது .இருவருக்கிடையே காமம் கசிந்துகொண்டிருந்தாலும் அந்த அன்புதான் அவர்களின் இலக்கினை மாற்றுகிறது . இலாக்காக்கியவன் இலக்காகிறான் .
ஏரோட்டிக் த்ரில்லர் என்ற வகையில் அந்த சரியான கலவை கைவரப்பெறாமல் போனால் படமே வேறுமாதிரி உருமாறுவதற்கு பெரும் வாய்ப்புகள் உண்டு , சிறு பிறழ்வில் மொத்தபடமும் சொல்லவந்ததை விட்டு விலகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் . அந்த விபத்துகளுக்கு வாய்பளிக்காமல் இறங்கி விளையாடியிருக்கிறார் .அறம் அன்பை கதையின் மையச்சரடாக வைத்துக்கொண்டு பாலியல் விஷயங்களை நகாசுக்கு மட்டும் பயன்படுத்தி முற்றாக அவரது பாணி படம்தான் என்பதை நிறுவுகிறார் .

No comments:
Post a Comment