Sunday, 20 December 2015

Wild Tales / 2014 / Spanish


 


     ஆறுவது சினம் என்று சொன்னாலும் , உண்மையாக ஆறக்கூடியதா சினம் !. ஆறுவதற்கு அடுத்த நொடியோ ஆண்டுகள் பலவோ எடுத்துக்கொள்ளளாம் அதன் வீரியத்தை பொருத்து . அப்படி ஆறா சினங்களின் அணிவகுப்பாக ஆறு குறும்படங்கள் . மனம் பிறழ்ந்தவனின் கோபம் , மணவாழ்க்கையில் கோபம் ,அதிகாரிகளின் அலட்சியத்தால் தனி ஒருவனுக்கு வரும் கோபம் ,highway-ல் ஆளை கொல்லும் அனாவசிய கோபம் , குற்றவாளியேயானாலும் குமைந்து வரும் கோபம் , ஆண்டுகள் பல ஆகியும் ஆறாத கோபம் என அத்தனையும் அமர்க்களம் .


     ஆரம்பம் அடித்து நொறுக்கிவிட்டார் . துரதர்ஷ்டவசமாக Old Boy- கதையை கேட்டு தொலைத்தது போல இந்த முதல் குறும்படத்தின் (Pasternak) கதையை படித்துதொலைத்துவிட்டேன் . படிக்கும்போதே அவளவு சுவாரஸ்யம் ! பார்க்கும் போதும் குறையவில்லை . தவறவே விடக்கூடாத 10 நிமிட குறும்படம் அது.

செம : மொத்தமும். குறிப்பாக முதல் மற்றும் கடைசி குறும்படங்கள்.

Trailer : https://www.youtube.com/watch?v=QUnXv6R2HI8

No comments:

Post a Comment